/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவு நீர் கால்வாய்க்கு மூடி அமைக்கப்படுமா?
/
கழிவு நீர் கால்வாய்க்கு மூடி அமைக்கப்படுமா?
ADDED : மே 14, 2024 06:35 AM

சித்தாமூர்: சித்தாமூர் அருகே பெரியகயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகயப்பாக்கம் காலனி பகுதியில், கழிவுநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு, 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.
கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், குடியிருப்புப் பகுதியில் உள்ள குழந்தைகள் தவறி விழும் அபாய நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

