/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்படுமா?
/
சித்தாமூர் சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்படுமா?
சித்தாமூர் சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்படுமா?
சித்தாமூர் சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்படுமா?
ADDED : ஏப் 06, 2024 09:30 PM
சித்தாமூர்:சித்தாமூரில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மற்றும் சோத்துப்பாக்கம் - செய்யூர் ஆகிய இரண்டு சாலைகள் சந்திக்கும் முக்கிய சாலை சந்திப்பு உள்ளது.
இச்சாலை சந்திப்பு வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலையில் இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் செய்யூர் - போளூர் சாலை விரிவாக்க பணியின் போது, சித்தாமூர் சாலை சந்திப்பும் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலையில் இருந்த இரண்டு வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
தற்போது வரை புதிய வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இச்சந்திப்பில் அதிவேகமாக வாகனங்கள் கடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சித்தாமூர் சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

