/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவனிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் இளைஞர் கைது
/
மாணவனிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் இளைஞர் கைது
ADDED : ஆக 18, 2024 01:07 AM

கூடுவாஞ்சேரி:காஞ்சிபுரம் மாவட்டம், வடமேல்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜாதாஸ், 34. திருமணமாகாதவர். இவர், பள்ளி மாணவ - -மாணவியரை காரில் அழைத்துச் சென்று, மாலையில் அழைத்துவரும் பணி செய்து வருகிறார்.
அவரது காரில், அப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன், சென்று வருவது வழக்கம். அப்போது, அந்த மாணவனை, ராஜாதாஸ் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இது குறித்து, மாணவன் விடுதி காப்பாளரிடம் தெரிவித்துள்ளான். அவர் அளித்த தகவலின்படி, மாணவனின் பெற்றோர் நேரில் வந்து, மாணவனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பரிசோதனை செய்தனர்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி, மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மணிமங்கலம் போலீசாரின் பரிந்துரையின்படி, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாலினி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, ராஜாதாஸை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில், நேற்று மாலை அடைத்தனர்.