/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உவர்ப்பான குடிநீர் வினியோகம் 1 கி.மீ., அலையும் கிராமவாசிகள்
/
உவர்ப்பான குடிநீர் வினியோகம் 1 கி.மீ., அலையும் கிராமவாசிகள்
உவர்ப்பான குடிநீர் வினியோகம் 1 கி.மீ., அலையும் கிராமவாசிகள்
உவர்ப்பான குடிநீர் வினியோகம் 1 கி.மீ., அலையும் கிராமவாசிகள்
ADDED : நவ 07, 2024 10:01 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கரும்பாக்கம் ஊராட்சியில் கரும்பாக்கம், விரால்பாக்கம், ராயல்பட்டு, பூயிலுப்பை, பாலுார் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இங்கு, ஊராட்சி நிர்வாகம் வாயிலாக ராயல்பட்டு, பூயிலுப்பை, பாலுார் ஆகிய கிராமங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் உவர்ப்பாக உள்ளது. இதனால், இப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் விலை கொடுத்து, கேன் தண்ணீரை வாங்கி குடித்து வருகின்றனர்.
மேலும் சிலர், 1 கி.மீ., வரை சென்று, திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே, பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
அங்கு வசிப்போர் தண்ணீர் பிடித்த பின், இப்பகுதிவாசிகள் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், அங்கு சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படும் சூழலும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.
எனவே, நல்ல தண்ணீர் வசதியை இக்கிராமங்களுக்கு நீட்டித்து, மினி டேங்க் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் அல்லது ஊராட்சி அலுவலகம் அருகே டேங்க் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.