/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கதவை உடைத்து 10 சவரன், ரூ.1 லட்சம் திருட்டு 'சிசிடிவி' கேமராக்களை 'ஆப்' செய்து கைவரிசை

ADDED : ஜன 04, 2025 09:26 PM
தாம்பரம்:மேற்கு தாம்பரம், சி.டி.ஓ., காலனி, சப்தகிரி நகர், பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ககார்நீஸ்வரன்.
மஸ்கட்டில், மருந்து விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, கடந்த மாதம் மஸ்கட்டிற்கு சென்றார்.
வீட்டில், அவர்களது மகள் நிவேதிதா, 22, மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவர், தனியார் கல்லுாரியில், எம்.பார்ம்., படித்து வருகிறார்.
இந்நிலையில், ஜன., 1ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, மாடம்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை, வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்தது. பக்கத்து வீட்டில் வசிப்பவர், இதை பார்த்து, நிவேதிதாவுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 சவரன் நகை, 1 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
ஒரு கவரில் கட்டி, ஷிலாப் மீது வைத்திருந்த 30 சவரன் நகை தப்பின. அதே நேரத்தில், திருடுவதற்கு வசதியாக, வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை, மர்ம நபர்கள் 'ஆப்' செய்திருந்தது தெரியவந்தது.
தடையவியல் நிபுணர்கள் வரவைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.