/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
1,022 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு
/
1,022 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு
ADDED : நவ 02, 2025 02:05 AM

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கத்தில், சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய எல்லையில் கைப்பற்றப்பட்ட, கஞ்சா பொருட்கள் தீயிலிட்டு எரிக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கத்தில், ஜி.ஜே., மல்டிகிலேவ் என்ற தனியார் மருத்துவ கழிவுகள் எரிக்கும் நிறுவனம் உள்ளது.
இங்கு, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் எரிப்பது வழக்கம்.
அதன்படி, சென்னை மாநகர காவல் ஆணையரக காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், 197 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,022 கிலோ கஞ்சா பொருட்கள், நேற்று தீயிலிட்டு அழிக்கப்பட்டன.
சென்னை மாநகர தலைமையக கூடுதல் ஆணையர் விஜயேந்திர பிடாரி தலைமையில், இந்த கஞ்சா பொருட்கள் அழிக்கப்பட்டன.
இதன் மதிப்பு, ஒரு கோடி ரூபாய் இருக்கும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

