/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல்
/
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஜன 12, 2025 02:23 AM
சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 3வது நடைமேடைக்கு 'பினாகினி' விரைவு ரயில் வந்தது.
இந்த ரயிலில் இறங்கி வந்த பயணியரை போலீசார் கண்காணித்தபோது, ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்.
உடனடியாக, அவரது பையை திறந்து பார்த்தபோது, அதில் 10.5 கிலோ எடையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு 2.10 லட்சம் ரூபாய்.
விசாரணையில், திருவண்ணாமலை, தேனிமலை பகுதியைச் சேர்ந்த செல்வம் எனவும், கஞ்சாவை கடத்தி வந்து விற்க திட்டமிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.