/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உதவி பேராசிரியர் தேர்வில் 128 பேர் 'ஆப்சென்ட்'
/
உதவி பேராசிரியர் தேர்வில் 128 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : டிச 28, 2025 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான ஓ.எம்.ஆர்., தேர்வு, மற்றும் எழுத்து தேர்வு, செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, லிட்டில் ஜாக்கி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில், நேற்று நடந்தது.
இதில், ஓ.எம்.ஆர்., தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட 616 பேரில், 554 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 62 பேர் தேர்வு எழுத வரவில்லை.
எழுத்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட 616 பேரில், 550 பேர் தேர்வு எழுதினர். 66 பேர் தேர்வு எழுத வரவில்லை என, முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தெரிவித்தார்.

