/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'தாம்பரத்தின் குரல்' செயலியில் 12,889 புகார்களுக்கு தீர்வு
/
'தாம்பரத்தின் குரல்' செயலியில் 12,889 புகார்களுக்கு தீர்வு
'தாம்பரத்தின் குரல்' செயலியில் 12,889 புகார்களுக்கு தீர்வு
'தாம்பரத்தின் குரல்' செயலியில் 12,889 புகார்களுக்கு தீர்வு
ADDED : மே 18, 2025 09:40 PM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கண்காணிக்கும் வகையில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு, மழைநீர் தேங்க வாய்ப்புள்ள 32 இடங்கள், சிசிடிவி' வாயிலாக கண்காணிக்கப்படுகின்றன.
குப்பை சேகரிக்கும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி கண்காணித்தல், பயோமெட்ரிக் முறையில் துாய்மை பணியாளர்களின் வருகையை உறுதிசெய்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தாம்பரத்தின் குரல் என்ற செயலி உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.
தொடர்ந்து, அவற்றின் மீது துறை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் நிவர்த்தி செய்யப்பட்ட நடவடிக்கை குறித்து, சம்பந்தப்பட்டோரை தொடர்பு கொண்டு உறுதி செய்யப்படுகிறது.நிவர்த்தி செய்யப்பட்ட விபரங்கள், புகார் அளித்தவருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும், பொறியியல், சுகாதாரம், வருவாய், நகரமைப்பு பிரிவு மற்றும் இதர சேவைகள் தொடர்பாக, இதுவரை 13,869 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 12,889 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்கள் மீது தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.