/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அரசு மருத்துவமனையில் 1,800 பேருக்கு தோல் நோய் சிகிச்சை
/
செங்கை அரசு மருத்துவமனையில் 1,800 பேருக்கு தோல் நோய் சிகிச்சை
செங்கை அரசு மருத்துவமனையில் 1,800 பேருக்கு தோல் நோய் சிகிச்சை
செங்கை அரசு மருத்துவமனையில் 1,800 பேருக்கு தோல் நோய் சிகிச்சை
ADDED : மார் 18, 2025 12:26 AM
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், தோல் நோய் பிரிவு, 1965ம் ஆண்டு துவங்கப்பட்டது.
இங்கு, பேராசிரியர், இணை பேராசிரியர் தலா ஒருவர் மற்றும் நான்கு உதவி பேராசிரியர்களும், 12 முதுகலை பட்டதாரி மாணவர்களும் பணிபுரிகின்றனர்.
தோல் நோய் சிகிச்சை பிரிவில், தினமும் 250 பேருக்கு மேற்பட்ட வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தோல் அலர்ஜி, படர்தாமரை, வெண்புள்ளி, தேமல், மங்கு, கொப்புளம், மரு, வளர்வடு, முடி உதிர்தல், நக சொத்தை உள்ளிட்ட நோய்களுக்கு, உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் இன்றி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் இல்லாத, தனியார் மருத்துவமனைக்கு இணையான நவீன சிகிச்சைகள், முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில், 1,800க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். தோல் நோயால் பாதிக்கப்பட்டோர், தோல் நோய் பிரிவை அணுகி பயன்பெறலாம் என, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சிவசங்கர் தெரிவித்தார்.