/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவுஞ்சூரில் 2 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
/
பவுஞ்சூரில் 2 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
ADDED : நவ 23, 2025 02:52 AM

பவுஞ்சூர்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து பவுஞ்சூரில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த 2 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய் துறையினர் நேற்று மீட்டனர்.
பவுஞ்சூர் பஜார் பகுதியில் சர்வே எண் 178/1 மற்றும் 178/3 உள்ளிட்ட பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
இதை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் கடைகள் கட்டி வசித்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பவுஞ்சூர் பகுதியை சேர்ந்த சத்யபிரகாஷ் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சர்வே எண் 178/3 ல் உள்ள மேய்க்கால் வகைபாட்டை சேர்ந்த 2 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நேற்று செய்யூர் வட்டாட்சியர் கணேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் 2 பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக, அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு இருந்த 8 வீடுகள் மற்றும் 3 கடைகளை இடித்து அகற்றினர். மதுராந்தகம் டி.எஸ்.பி., சதீஸ்குமார் தலைமையிலான 90 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்ட அரசு நிலம் 20 லட்சம் ரூபாய் மதிப்புடையது.

