/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி கட்டட உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வருவாய் ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை
/
பள்ளி கட்டட உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வருவாய் ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை
பள்ளி கட்டட உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வருவாய் ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை
பள்ளி கட்டட உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வருவாய் ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : மே 01, 2025 01:33 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், புது எடையூர் குப்பத்தில், தனக்கு சொந்தமான இடத்தில் 2005ல் இருந்து, ஜெ.கே., என்ற பெயரில் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி நடத்தி வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு மே 31ம் தேதியுடன் பள்ளி கட்டடத்தின் உரிமைச் சான்று முடிவடைய இருந்ததால், திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில் உரிமைச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து இருந்தார்.
இந்த மனு விசாரணைக்காக பள்ளியில் ஆய்வு செய்த, கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன்,67, என்பவர், தன்னை அலுவலகத்தில் வந்து பார்க்கும்படி கூறி விட்டுச் சென்று உள்ளார்.
கண்ணன், 2014 மே 15ம் தேதி, அலுவலகத்திற்கு சென்று மணிவண்ணனை பார்த்த போது, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார்.
இதுகுறித்து கண்ணன், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, கண்ணனிடம் ரசாயனம் தடவிய 2,000 ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பி, அதை மணிவண்ணன் வாங்கும் போது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார், செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றினர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடைபெற்று வந்தது.
வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ நேற்று தீர்ப்பளித்தார்.