/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
20 மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக பயன்பாட்டிற்கு இடம் ஒதுக்கீடு
/
20 மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக பயன்பாட்டிற்கு இடம் ஒதுக்கீடு
20 மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக பயன்பாட்டிற்கு இடம் ஒதுக்கீடு
20 மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக பயன்பாட்டிற்கு இடம் ஒதுக்கீடு
ADDED : பிப் 20, 2025 11:58 PM
சென்னை,:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணியரிடமிருந்து வரும் கட்டண வசூல் மட்டுமின்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் கட்டணம் மட்டுமின்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சொந்தமான இடங்களில் விளம்பரங்கள் செய்வது, காலியாகவுள்ள இடங்களை வணிக பயன்பாட்டிற்கு அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்ட்ரல், எழும்பூர், வடபழனி, நந்தனம், சைதாப்பேட்டை, டி.எம்.எஸ்., ஆயிரம் விளக்கு, பரங்கிமலை உட்பட, 20 மெட்ரோ ரயில் நிலையங்களில், வணிக பயன்பாட்டிற்கு அனுமதிக்க உள்ளோம். உணவகம், பர்னிச்சர் கடைகள், துணி, நகை கடைகள் உள்ளிட்டவை அமைக்கலாம்.
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஏற்றாற்போல், 20 சதுர மீட்டர் முதல் அதிகபட்சமாக, 1,900 சதுர மீட்டர் வரை இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
விருப்பமுள்ளோர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின், chennaimetrorail.org/business-development/retail-spaces என்ற தளத்துக்கு சென்று, தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.