sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த தாம்பரம் போலீசாருக்கு 26 புதிய பைக்குகள்

/

போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த தாம்பரம் போலீசாருக்கு 26 புதிய பைக்குகள்

போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த தாம்பரம் போலீசாருக்கு 26 புதிய பைக்குகள்

போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த தாம்பரம் போலீசாருக்கு 26 புதிய பைக்குகள்


ADDED : ஜூலை 03, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பம் போலீஸ் கமிஷனரகத்தின் சார்பில், போக்குவரத்து போலீசார் பயன்பாட்டிற்கு, 26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள், பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டு உள்ளன.

தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துவதற்காக, 26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள் துவக்கி வைத்தல் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி, குரோம்பேட்டை காவல் நிலைய வளாகத்தில், நேற்று நடந்தது.

இதில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் பங்கேற்று, துணை கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்களை, பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

புதிதாக துவக்கி வைக்கப்பட்டுள்ள டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள், ஜி.எஸ்.டி., - ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., ரேடியல் சாலைகள் மற்றும் பிற சாலைகளில் ரோந்து செல்ல பயன்படுத்தப்படும்.

ஒவ்வொரு வாகனத்திலும் சைரன், ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு ரோந்து மற்றும் நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து மார்ஷல்கள், 8 மணி நேர ஷிப்டுகளில் பணிபுரிவர். நெரிசல் நேரங்களில் அதிக கவனம் செலுத்துவர்.

நெரிசலை சரிசெய்தல், விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி, சாலைகளில் பழுதடைந்து நிற்கும் வாகனங்களை அகற்ற உதவுதல், பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு அருகில், சீரான போக்குவரத்தை உறுதி செய்தல் ஆகியவை, இவர்களின் பணி.

அலுவலகம் மாற்றம்

தாம்பரம் போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், காமாட்சி மருத்துவமனை அருகே, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இயங்கி வந்தது.அங்கு போதிய வசதி இல்லாததாலும், பொதுமக்கள் நீண்ட துாரம் செல்ல வேண்டியிருந்ததாலும், குரோம்பேட்டை காவல் நிலைய கட்டடத்தின் கீழ் தளத்தில், அலுவலகம் தயார் செய்யப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இனி, தாம்பரம் போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகம், குரோம்பேட்டையில் இயங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜனவரி- ஜூன் வரை

2,25,109 வழக்கு பதிவுதாம்பரம் கமிஷனரகத்தின் போக்குவரத்து காவல் துறை சார்பில், இதுவரை, 150க்கும் மேற்பட்ட சாலையோர தள்ளுவண்டி உணவகங்கள் அகற்றப்பட்டுள்ளன. விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக, ஹெல்மெட் அணிந்து பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தவறான திசையில் வாகனம் ஓட்டியதற்காக, 4,000த்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, 2,25,109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம்.இந்தாண்டு, ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 48,551 வழக்குகளும், போதையில் வாகன ஓட்டியதாக, 4,827 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.








      Dinamalar
      Follow us