/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தங்க நாணயங்கள் திருட்டு 2 பெண் உட்பட 3 பேர் கைது
/
தங்க நாணயங்கள் திருட்டு 2 பெண் உட்பட 3 பேர் கைது
ADDED : பிப் 09, 2025 12:28 AM
திருவான்மியூர்,
திருவான்மியூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஹேமந்த், 23. அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி, ஒரு ஆண், இரு பெண்கள் சென்று, தாலிக்கு தேவையான தங்க நாணயங்கள் கேட்டனர்.
ஹேமந்த் நாணயங்களை எடுத்துக் காட்டினார். சில நிமிடங்களில், வீட்டில் இருந்து பழைய நகையை எடுத்து வருவதாகக் கூறி, மூன்று பேரும் அங்கிருந்து சென்றனர்.
நாணயங்களை சரி பார்த்தபோது, 40 கிராம் எடை கொண்ட, 13 நாணயங்கள் திருடு போனது தெரிந்தது.
புகாரின்படி, திருவான்மியூர் போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.
அதில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன், 53, பாண்டீஸ்வரி, 50, மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி, 45, என, தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள், சென்னை வந்து குறிப்பிட்ட கடைகளை நோட்டமிட்டு, இதுபோன்று திருடிவிட்டு சொந்த ஊர் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் மீது, ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன.