/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் பூங்காவிற்கு 3 லட்சம் பேர் வருகை
/
வண்டலுார் பூங்காவிற்கு 3 லட்சம் பேர் வருகை
ADDED : ஜூன் 01, 2025 09:00 PM

தாம்பரம்:வண்டலுார் உயிரியல்பூங்கா, 1,490 ஏக்கர் பரப்பளவு உடையது. பாலுாட்டிகள், ஊர்வன, பறவை, ஊன் உண்ணிகள் என, எட்டு வகையிலான, 2,400 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.
மான்கள் மற்றும் சிங்கங்களை, அவை உலவும் பகுதியிலேயே பார்வையிடுவதற்கு, 'சபாரி' உள்ளது.
வெவ்வேறு இடங்களில் உள்ள விலங்குகள், பறவைகள் காட்சிக்கூடத்தை காண, பேட்டரி கார் வசதியும் உள்ளது. பார்வையாளர்கள் வசதிக்காக, ஏழு பரிமாண காட்சி கூடமும் திறக்கப்பட்டுள்ளது.
நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சிறந்த பொழுது போக்கு இடமாக, இப்பூங்கா திகழ்கிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு, டிக்கெட் எடுப்பதை எளிதாக்க, ஐந்து தானியங்கி 'டிக்கெட்' உருவாக்கும், 'கியோஸ்க்குகள்' நிறுவப்பட்டுள்ளன.
உயிரியல் பூங்காவை வாகனங்களில் சுற்றிப்பார்க்க, மொபைல் போன் ஆப் வசதி உள்ளது. பார்வையாளர்கள் தங்களை வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், எளிதாக பூங்காவை சுற்றிப் பார்க்வும், பல்வேறு வசதிகளை பூங்கா நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதையடுத்து, கடந்த ஏப்ரல், மே மாத கோடை விடுமுறையில், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர், பூங்கா வந்து பார்வையிட்டுள்ளனர் என, பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.