/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒரே இரவில் 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
/
ஒரே இரவில் 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : ஜன 09, 2025 08:29 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் ஜாபர், 47, என்பவர் டீ கடையும், ரவி, 40, என்பவர் மருந்தகமும், வெங்கூர் பகுதியில் ராம்பிரசாந்த், 28, என்பவர் மருந்தகமும் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், தங்களது கடைகளை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று காலை கடையைத் திறக்க வந்த போது, மூன்று பேரின் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதில், டீ கடையில் இருந்து 5,000 ரூபாயும், இரண்டு மருந்தகங்களில் இருந்தும் தலா 500 ரூபாயையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து தகவலின்படி, திருப்போரூர் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
இதேபோல், கடந்த டிச., 17ம் தேதியும், மேற்கண்ட பகுதியில் ஒரே இரவில் மொபைல்போன் கடை, மளிகை கடை என, மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணம், மொபைல்போன் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.