sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கலங்கரைவிளக்க சுற்றுலா பயணியர் 10 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரிப்பு

/

கலங்கரைவிளக்க சுற்றுலா பயணியர் 10 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரிப்பு

கலங்கரைவிளக்க சுற்றுலா பயணியர் 10 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரிப்பு

கலங்கரைவிளக்க சுற்றுலா பயணியர் 10 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரிப்பு


ADDED : அக் 20, 2024 12:31 AM

Google News

ADDED : அக் 20, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:இந்தியாவில் கலங்கரைவிளக்கம் காணும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் 300 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடற்பகுதி நீர்வழித் தடங்கள் வழியில் பயணியர், சரக்கு கப்பல்கள், மீன்பிடி படகுகள் ஆகியவை இயங்குகின்றன. இரவில் கடலின் நீர்வழித்தடங்கள் மற்றும் பயண திசையை அறிந்து செல்ல கலங்கரைவிளக்கங்கள், வழிகாட்டியாக பயன்படுகின்றன.

கடல்வழி போக்குவரத்து, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட வகைகளில், கலங்கரைவிளக்க பங்களிப்பு முக்கியமானது. இந்திய கப்பல் போக்குவரத்து துறையின்கீழ் செயல்படும் கலங்கரைவிளக்கங்கள், விளக்கு கலங்கள் இயக்குனரகம், கலங்கரைவிளக்கங்களை இயக்குகிறது.

நாடு முழுதும் குறிப்பிட்ட கலங்கரைவிளக்கங்களை, இயக்குனரகம் சுற்றுலாவிற்கும் பயன்படுத்துகிறது. கலங்கரைவிளக்க மேல்தளத்திலிருந்து, சுற்றுபுற அழகை, பறவை பார்வையில் கண்டு ரசிக்கலாம் என்பதால், பயணியர் கலங்கரைவிளக்க சுற்றுலாவிற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

தமிழகத்தில், மாமல்லபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கலங்கரைவிளக்கங்கள், சுற்றுலா சிறப்புடன் விளங்குகிறது.

அத்தகைய கலங்கரைவிளக்கங்களில், சுற்றுலா பயணியரை மேலும் கவர, லேசர் ஒளி - ஒலி காட்சி உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்களை, அத்துறை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.

கடந்த 2013 - 14ல் கலங்கரைவிளக்கங்களை பார்வையிட்ட பயணியர் எண்ணிக்கையைவிட, தற்போது பார்வையிட்ட பயணியர் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அத்துறை தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில், இரண்டு நாட்கள் கலங்கரைவிளக்க விழா கொண்டாடப்படுகிறது. நேற்று விழா துவங்கி, இன்றும் நடக்கிறது. இதை முன்னிட்டு, நாடு முழுதும் சுற்றுலா சிறப்பு பெற்ற கலங்கரைவிளக்கங்களில், இரவில் வண்ண விளக்குகள் பொருத்தி ஒளிர்கின்றன.

இந்த விழாவை பயணியர் காண, நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. பழங்காலத்தில் கலங்கரைவிளக்க உருவாக்கம், பயன்பாடு, இன்றைய முன்னேற்றம், அதன் சுற்றுலா மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us