/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெள்ள பாதிப்பு ஏற்படும் 390 இடங்கள் செங்கை மாவட்டத்தில் 33 மீட்பு குழு அமைப்பு
/
வெள்ள பாதிப்பு ஏற்படும் 390 இடங்கள் செங்கை மாவட்டத்தில் 33 மீட்பு குழு அமைப்பு
வெள்ள பாதிப்பு ஏற்படும் 390 இடங்கள் செங்கை மாவட்டத்தில் 33 மீட்பு குழு அமைப்பு
வெள்ள பாதிப்பு ஏற்படும் 390 இடங்கள் செங்கை மாவட்டத்தில் 33 மீட்பு குழு அமைப்பு
ADDED : செப் 02, 2025 01:05 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டுகளில் பெய்த மழை வெள்ளத்தை அடிப்படையாக வைத்து, 390 இடங்கள் அதிகம் பாதிக்கும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளன. இதையடுத்து, மழை வெள்ளத்தில் சிக்குவோரை மீட்க, 33 குழுக்களும், 290 தங்கும் முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இதில், செங்கல்பட்டு, வண்டலுார், தாம்பரம் ஆகிய தாலுகா பகுதிகள் வடகிழக்கு பருவழையால் அதிகமாக பாதிக்கப்படும் பகுதிகளாக உள்ளன.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, கலெக்டர் சினேகா தலைமையில், சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை விபரம்:
கன மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர்கள், குழுவின் தலைவர்கள் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கடலோர பகுதிகளில், 52 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. மீன்வளத்துறை மூலமாக அறிவிக்கப்படும் முன்னெச்சரிக்கையை, மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
மாவட்டத்தில், 4,500 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, ஆபத்து காலங்களில், பொதுமக்களுக்கு உதவ, அனைத்து விதத்திலும் தயார் நிலையில் உள்ளனர்.
நீச்சல் தெரிந்தவர்கள் 1,262 பேர், பாம்பு பிடிப்பவர்கள் 158 பேர், மரம் ஏற தெரிந்தவர்கள் 517 பேர், என, மொத்தம் 1,937 பேர் உள்ளனர்.
மாநில பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற 650 அலுவலர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டத்தில், மிக அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 71, அதிகளவு பாதிப்பு 122, மிதமான பாதிப்பு, 124, குறைவாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 73 என, மொத்தம் 390 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
மேலும், 359 கிராம ஊராட்சிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு குழு என, 33 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் அனைத்து துறை அலுவலர்கள் 12 பேர் வீதம், 386 பேர் உள்ளனர்.
வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளில், பயன்பாட்டில் உள்ள படகுகள் தயார் நிலையில் உள்ளன.
பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு, புயல் பாதுகாப்பு மையங்கள் 20, பாதுகாப்பு மையம் 290, பாதுகாப்பு புயல் நிவாரண மையம் 3 என, 313 மையங்கள் உள்ளன. இங்கு, 67,877 பேரை தங்க வைக்க முடியும்.
கால்நடைகளை காப்பற்ற 164 தங்குமிடங்கள் உள்ளன.
சுகாதாரத்துறை மூலமாக, 50 மருத்துவ குழுக்கள், அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வசதி தாயார் நிலையில் உள்ளது. மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.