/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 35 முதல்வர் மருந்தகம் 24ல் காணொலி வாயிலாக துவக்கம்
/
செங்கையில் 35 முதல்வர் மருந்தகம் 24ல் காணொலி வாயிலாக துவக்கம்
செங்கையில் 35 முதல்வர் மருந்தகம் 24ல் காணொலி வாயிலாக துவக்கம்
செங்கையில் 35 முதல்வர் மருந்தகம் 24ல் காணொலி வாயிலாக துவக்கம்
ADDED : பிப் 19, 2025 07:40 PM
செங்கல்பட்டு:முதல்வர் ஸ்டாலின், குறைந்த விலையில், பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், ஆயிரம் முதல்வர் மருந்தகம் திறக்க உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள , பி,பார்ம், மற்றும் டி.பார்ம் சான்று பெற்றோர் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், விண்ணப்பிக்க, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அழைப்பு விடப்பட்டது.
இதற்கு அரசு மானியம் 3 லட்சம் ரூபாய் , இரண்டு தவனையாக ரொக்கவமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும் என, மாவட்ட மண்டல கூட்டுறவுச்சங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, தொழில்முனைவோர்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள், முதல்வர் மருத்தகம் அமைக்க விண்ணப்பித்திருந்தனர்.
இந்த விண்ணப்பங்களை பரிசிலினை செய்ததில், 20 முனைவோர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தில், கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கள் 15 இடங்களிலும், தனியார் தொழில்முனைவோர்கள் 20 பேர் என, மொத்தம் 35 முதல்வர் மருந்தகம் அமைக்க, உத்தரவுகள் வழங்கப்பட்டது.
இம் மருதகங்களை முதல்வர் ஸ்டாலின் வரும் 24ம் தேதி, காணொலி காட்சி வாயிலாக திறந்து வைப்பதாக, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் சார்பில், செய்யூர் அடுத்த, சரவம்பாக்கம், சூணாம்பேடு, அச்சிறுப்பாக்கம், எல்.எண்டத்துார், சோத்துப்பாக்கம், மானாமதி, நெல்லிக்குப்பம், மாம்பாக்கம், தென்மேல்பாக்கம், காயரம்பேடு, நல்லம்பாக்கம், திருப்போரூர் நகர கூட்டுறவு கடன் சங்கம், தண்டலம், ஆத்துார் செங்கல்பட்டு கூட்டுறவு மாவட்ட மொத்த நுகர்வோர் பண்டகாலசாலை, செம்பாக்கம், பெருங்களத்துார் காஞ்சிபுரம் கூட்டுறவு மாவட்ட மொத்த நுகர்வோர் பண்டகசாலை ஆகிய இடங்களிலும்,
தனிநபர் சார்பில், சோத்துப்பாக்கம், கடப்பாக்கம், மதுராந்தகம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, மேற்கு தாம்பரம், மாடம்பாக்கம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, கிழக்கு தாம்பரம், திருப்போரூர், மாமல்லபுரம், மறைமலை நகர், பெருங்களத்துார், செம்பாக்கம் ஆகிய இடங்களிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்படவுள்ளது.

