/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டத்தில் 417 மனு ஏற்பு
/
குறைதீர்வு கூட்டத்தில் 417 மனு ஏற்பு
ADDED : ஜன 22, 2025 12:17 AM
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளிடம் கலந்துரையாடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று மனுக்கள் பெற்றார்.
கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதி, மின் அழுத்த குறைபாடு, பேருந்து வசதி, நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 417 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, வேளாண்மைத் துறை சார்பில், இரண்டு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய 'பவர் டில்லர்'களை, அமைச்சர் வழங்கினார்.