ADDED : ஆக 29, 2025 11:55 PM

செய்யூர், செய்யூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட 46 விநாயகர் சிலைகள் கடலில் நேற்று விஜர்சனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி நாடு முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்கள், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் மற்றும் ஹிந்து இயக்கங்கள் சார்பாக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
வழிபாடு முடிந்ததை அடுத்து மூன்றாம் நாளான நேற்று மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், கூவத்துார், பவுஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கடப்பாக்கம் , கடலுார் குப்பம், தழுதாளிகுப்பம் பகுதி கடலில் போலீஸ் பாதுகாப்புடன் விஜர்சனம் செய்யப்பட்டன. கடப்பாக்கத்தில் 25, தழுதாளிகுப்பத்தில் 20, கடலுார் குப்பத்தில் 1 என மொத்தம் 46 சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.