/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்ரீபெரும்புதுாரில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
/
ஸ்ரீபெரும்புதுாரில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
ADDED : செப் 09, 2025 12:40 AM
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுாரில் கஞ்சா விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட போந்துார் கிராமத்தில், நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, போந்துார் பாரத் பெட்ரோல் பங்க் அருகே, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த, மொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கரண், 23, போந்துாரைச் சேர்ந்த விக்னேஷ், 22, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக், 21, ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையில், கஞ்சா இருப்பது தெரிந்தது. மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, 1,500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல, மாம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் கஞ்சா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் கோபே பண்டல், 40, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பனாமலி கங்குலி, 30, ஆகிய இரண்டு பேரை கைது செய்து, 1,500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.