/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நில அபகரிப்பு பிரிவில் 5 மனுக்கள் ஏற்பு
/
நில அபகரிப்பு பிரிவில் 5 மனுக்கள் ஏற்பு
ADDED : மே 27, 2025 07:52 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், நில அபகரிப்பு பிரிவில், ஐந்து மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், நில அபரிகரிப்பு பிரிவு உள்ளது. இங்கு, நில அபகரிப்பு சம்பந்தமாக மனுக்கள் அளிக்கப்படுகின்றன. இந்த மனுகள் மீதான விசாரணையில், தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, மாவட்டத்தில் வருவாய்த்துறை, காவல் துறை, பதிவுத்துறை, நில அளவைத் துறை சார்ந்த அலுவலர்கள் கொண்டு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைத்து, அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில், நில அபகரிப்பு சிறப்பு பிரிவு குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் நரேந்திரன் தலைமயைில், நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், நிலம் தொடர்பான ஐந்து மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, விசாரணை நடைபெற்றது. இதில், ஒரு மனுவிற்கு தீர்வு காணப்பட்டதாக, நில அபகரிப்பு பிரிவு குழுவினர் தெரிவித்தனர்.