/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நின்ற லாரி மீது பைக் மோதி ஆப்பூரில் 50 வயது நபர் பலி
/
நின்ற லாரி மீது பைக் மோதி ஆப்பூரில் 50 வயது நபர் பலி
நின்ற லாரி மீது பைக் மோதி ஆப்பூரில் 50 வயது நபர் பலி
நின்ற லாரி மீது பைக் மோதி ஆப்பூரில் 50 வயது நபர் பலி
ADDED : ஜூலை 25, 2025 07:53 PM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, 'பைக்' மோதியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து, சிங்க பெருமாள் கோவில் அடுத்த தாசரி குன்னத்துார் கிராமத்திலுள்ள கோழிப் பண்ணைக்கு தீவனம் ஏற்றிய, அசோக் லேலண்ட் லாரி நேற்று மதியம் வந்தது.
இந்த லாரியை, திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மனோகர், 50, என்பவர் ஓட்டி வந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஆப்பூர் அருகே வந்த போது, முகவரி கேட்பதற்காக டிரைவர் மனோகரன் சாலையோரம் லாரியை நிறுத்தி உள்ளார்.
அப்போது பின்னால்,'ஹோண்டா ஷைன்' பைக்கில் வேகமாக வந்த, 50 வயது மதிக்கத்தக்க நபர், சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் மோதி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
பைக்கின் பதிவு எண்ணை வைத்து, இறந்தவர் குறித்தும், லாரி ஓட்டுநர் மனோகரனிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.

