/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்
/
சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்
சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்
சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : ஆக 12, 2025 10:56 PM
பெருங்களத்துார்: பெருங்களத்துாரில், சிறிய கடைகளுக்கு 'சப்ளை' செய்வதற்காக, சொகுசு காரில் கடத்தப்பட்ட, 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
பெருங்களத்துாரை அடுத்த ஆலப்பாக்கத்தில், சொகுசு காரில் குட்கா பொருட்களை கடத்தி வரப்பட்டு, சிறிய கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம், பீர்க்கன்காரணை போலீசார், ஆலப்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த, 'ஹோண்டா கிரிட்டா' காரை மடக்கி சோதனை நடத்தியதில், அதில் 150 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த செங்குன்றத்தை சேர்ந்த சத்யா, 37, பொழிச்சலுாரை சேர்ந்த சுந்தர்ராஜ், 34, ஆகிய இருவரை கைது செய்தனர்.
பின், விசாரணை நடத்தி, செங்குன்றத்தில் உள்ள சத்யா வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 350 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும், புழல், செங்குன்றம் காவல் நிலையங்களில், ஏற்கனவே குட்கா வழக்குகள் நிலுவையில் உள்ளன.

