/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டத்தில் 508 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்வு கூட்டத்தில் 508 மனுக்கள் ஏற்பு
ADDED : ஏப் 22, 2025 12:14 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 508 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
இதில், இலவச வீட்டுமனை பட்டா, மின் வசதி, பட்டா மாற்றம், புதிய ரேஷன் கார்டு, சுய தொழில் துவங்க வங்கி கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 508 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பின், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், மூன்று பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை உட்பட 20 பேருக்கு, 10 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், வருவாய்த்துறை சார்பில், கடல் அலையில் மூழ்கி இறந்த இரண்டு பேரின் குடும்பத்தினருக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பேரூராட்சித் துறைக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வான இளநிலை உதவியாளருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.