/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 6 பேருக்கு 'காப்பு'
/
கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 6 பேருக்கு 'காப்பு'
ADDED : அக் 12, 2025 10:34 PM
செய்யூர்:செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 6 பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
செய் யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சூணாம்பேடு, கடப்பாக்கம், வெடால் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி விழாவை முன்னிட்டு கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க, மதுராந்தகம் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில், நேற்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதி ல் சூணாம்பேடு காலனி பகுதியில், கள்ளத்தனமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட மலர், 45, மற்றும் குமாரி, 36, ஆகியோரிடம் இருந்து, 75 'குவார்ட்டர்' மதுபாட்டில்கள், துறையூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, 48, என்பவரிடம் இருந்து 35 குவார்ட் டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மே லும், செய்யூர் பகுதியில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட எல்.என்.புரம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், 48, பெரியவெண்மணியை சேர்ந்த ராஜேஷ், 32, சூணாம்பேடு காலனியைச் சேர்ந்த தமிழ்வேந்தன், 35, என மொத்தம் 6 பேரை, போலீசார் கைது செய்தனர்.
மேலும், சூணாம்பேடு பகுதியில் புதுப்பட்டு மற்றும் கொளத்துார் பகுதியில் போலீசார் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.