/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரத்தில் 65 டன் குப்பை அகற்றம்
/
தாம்பரத்தில் 65 டன் குப்பை அகற்றம்
ADDED : செப் 21, 2024 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, பேருந்து நிறுத்தங்கள், சாலைகளில், நேற்று 'மாஸ் கிளினீங்' எனும் துாய்மை பணி நடந்தது. இதில், 250 துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
குப்பை கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகளை அழித்தல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மழைநீர் கால்வாயை துார்வாருதல், மரக்கிளைகளை அகற்றுதல், எரியாத மின் விளக்குகளை சீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த துாய்மை பணியில் 65 டன் குப்பை அகற்றப்பட்டன. இவை, கன்னடபாளையம் குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.