/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசூரில் 65ம் ஆண்டு தேர் உத்சவம் விமரிசை
/
அரசூரில் 65ம் ஆண்டு தேர் உத்சவம் விமரிசை
ADDED : மே 23, 2025 02:31 AM

சூணாம்பேடு:அரசூர் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு அடுத்த அரசூர் கிராமத்தில், பொன்னியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் 65ம் ஆண்டு தேர் திருவிழா, கடந்த 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
காப்பு கட்டுதல், மாலையில் அம்மனுக்கு ஊரணி பொங்கல் மற்றும் இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது.
கடந்த 20ம் தேதி, அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்வாக நேற்று, பொன்னியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் தேர் திருவிழா நடந்தது.காலை 11:30 மணியளவில், திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு, கிராம முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மாலை 5:00 மணியளவில் நிலையை வந்தடைந்தது.
பக்தர்கள் தங்களது வீடுகளின் முன் கிடா வெட்டி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழா ஏற்பாடுகளை, அரசூர் கிராம மக்கள் செய்திருந்தனர். இன்று தெப்பல் உத்சவம் நடக்க உள்ளது.