/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்றாண்டுகளில் 67,000 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 250 பேர் கைது
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்றாண்டுகளில் 67,000 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 250 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்றாண்டுகளில் 67,000 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 250 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்றாண்டுகளில் 67,000 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 250 பேர் கைது
ADDED : ஜூன் 20, 2025 11:38 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக இதுவரை, 495 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 67,000 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு குடும்பத்திற்கு, மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 845 ரேஷன் கடைகள் உள்ளன.
இந்த கடைகளுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அரிசி ஆலைகளில் இருந்து, அரசி வினியோகம் செய்யப்படுகிறது. இதில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், பெரும்பாலானோர் ரேஷன் அரிசி பெறுவதில்லை.
இந்த அரிசியை சட்ட விரோதமாக பெறும் சில முதலாளிகள், புரோக்கர்கள் வாயிலாக அதிக லாபத்திற்கு விற்பனை செய்கின்றனர்.
தனியார் அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசி, 'பாலிஸ்' செய்யப்பட்டு, கிலோ 25 ரூபாய் வரை வெளி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
வடமாநில தொழிலாளர்களிடம் ரேஷன் அரிசி, ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு, லாரி மற்றும் ரயில்கள் வாயிலாக கடத்தி, கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திருட்டை கண்காணிக்க குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் ஐந்து போலீசார் பணியில் ஈடுபடுவர். இவர்களை கண்காணிக்க, டி.எஸ்.பி., - எஸ்.பி., ஆகியோரும் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில், ரேஷன் அரிசி கடத்தல் அதிகமாக நடக்கிறது.
அத்துடன், காஞ்சிபுரம் மாவட்டம், ஒலிமுகமதுபேட்டை பகுதியைச் சேர்ந்த சிலர், அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கும்பல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகிறது.
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, மாதந்தோறும் 'மாமூல்' தருவதாக கூறப்படுகிறது.
மாமூல் தராமல் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவேரை மட்டும், சில அதிகாரிகள் பிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வகையில், மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், 495 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பறக்கும் படையில் உள்ள அதிகாரிகள், பெயரளவிற்கு சோதனைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அத்துடன், வீட்டு உபயோக சிலிண்டர்கள், தனியார் டீ கடை மற்றும் உணவகங்களுக்கு சட்டவிரோதமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
போலீசார் மற்றும் குடிமைப்பொருள் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அரிசி கடத்தல், வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனை ஜோராக நடக்கிறது.
இதை தடுக்க மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.