/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து கிறிஸ்துமஸுக்கு 740 பஸ் இயக்கம்
/
கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து கிறிஸ்துமஸுக்கு 740 பஸ் இயக்கம்
கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து கிறிஸ்துமஸுக்கு 740 பஸ் இயக்கம்
கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து கிறிஸ்துமஸுக்கு 740 பஸ் இயக்கம்
ADDED : டிச 24, 2024 11:05 PM
கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரு நாட்களில், கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற பயணியருக்காக 640 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கிளாம்பாக்கம் பேருந்து முனைய அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாவையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு ஆர்வமுடன் வந்தனர்.
பலர் ஏற்கனவே பேருந்துகளுக்கு முன்பதிவு செய்திருந்தனர். பேருந்து நிலையத்திற்கு வந்து, இங்கேயே உடனடி முன்பதிவு செய்து பயணிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வகையில் முன்பதிவு, உடனடி பதிவு, முன்பதிவு இல்லாதது என, 640 சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு, பயணியர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணியருக்கு, இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் வாயிலாக, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.