/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
79 வயது மூதாட்டி அடித்து கொலை: தப்பியோட முயன்ற முதியவர் கைது பலாத்காரம் செய்யப்பட்டாரா என விசாரணை

ADDED : டிச 16, 2025 05:53 AM

நொளம்பூர்: நொளம்பூரில் 79 வயது மூதாட்டியை அடித்து கொன்ற முதியவர் கைது செய்யப்பட்டார். பலாத்கார முயற்சியில் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
நொளம்பூர், சித்தார்த் நகரைச் சேர்ந்தவர் மேரி, 79. இவர், வீட்டின் அருகே உள்ள ஹோட்டலில் பணிபுரிந்தார். வழக்கம்போல பணிக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார்.
சிறிது நேரத்தில், மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
அங்கிருந்து தப்பியோட முயற்சித்த நபரை, பகுதிமக்கள் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, 72, என தெரிந்தது. நொளம்பூர் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.
'மூதாட்டி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்ற போது, சத்தம் போட்டதால் அவரை கீழே தள்ளி, தலையை தரையில் அடித்ததில் இறந்து விட்டார்' என, முதியவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மூதாட்டி அணிந்திருந்தது 'கவரிங்' நகை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மூதாட்டியை கொலை செய்த ஏழுமலை, அப்பகுதியில் உள்ள பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்துள்ளார்.
மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஏழுமலை மூதாட்டியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.