/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரத்தில் பறிமுதல் செய்த 833 கிலோ கஞ்சா அழிப்பு
/
தாம்பரத்தில் பறிமுதல் செய்த 833 கிலோ கஞ்சா அழிப்பு
தாம்பரத்தில் பறிமுதல் செய்த 833 கிலோ கஞ்சா அழிப்பு
தாம்பரத்தில் பறிமுதல் செய்த 833 கிலோ கஞ்சா அழிப்பு
ADDED : ஜூலை 22, 2025 09:18 PM
தாம்பரம்:தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லைகளில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட, 833.5 கிலோ கஞ்சா, நேற்று அழிக்கப்பட்டது.
தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லைகளில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட, 833.5 கிலோ கஞ்சா, செங்கல்பட்டு மாவட்டம், செங்குன்றம், தென்மேல்பாக்கத்தில் அமைந்துள்ள ஜி.ஜே., மல்டிகிளேவ் நிறுவனத்தில் அழிக்கப்பட்டது.
போதை பொருட்களின் ஆபத்தான தன்மை, விரைந்து அழிந்துபோகும் தன்மை மற்றும் சரியான சேமிப்பு இடங்களின் குறைபாடு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு, என்.டி.பி.எஸ்., விதிகளின் படி, பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அழிப்பு நடவடிக்கை, சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றி, உரிமம் பெற்ற எரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்முறை, மூத்த அதிகாரிகள் தலைமையில், முழு வெளிப்படைத்தன்மையுடன் மற்றும் என்.டி.பி.எஸ்., சட்டத்தின் படி நடந்தது. தாம்பரம் போலீஸ் கமிஷனரகம், போதை பொருட்களை அழிப்பதன் மூலம், போதை பழக்கம் மற்றும் கடத்தலை ஒழிக்க, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் இதுவரை, 2,137.5 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,000 கிலோவுக்கு மேல் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அழிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.