/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாடியில் இருந்து விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு
/
மாடியில் இருந்து விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு
மாடியில் இருந்து விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு
மாடியில் இருந்து விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு
ADDED : பிப் 27, 2024 10:58 PM
சேலையூர்:சேலையூர் அடுத்த திருவஞ்சேரி, ஜெயலலிதா தெருவைச் சேர்ந்தவர் குமார்; கட்டட தொழிலாளி. இவரது மகன் தீனா, 6. இரண்டாவது மாடியில், குமார் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, கடைக்கு செல்வதற்காக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது, தந்தையுடன், சிறுவன் தீனாவும் இறங்கி வந்தான்.
இருசக்கர வாகனத்தில் குமார் கடைக்கு சென்றார். பின், தீனா மாடி வழியாக வீட்டிற்கு சென்றான். முதல் மாடியில் எட்டிபார்த்த சிறுவன், அங்கிருந்து தவறி கீழே விழுந்தான்.
இதில், படுகாயமடைந்த சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின், மேல் சிகிச்சைக்காக, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து வழக்கு பதிந்த சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

