/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திடீரென குறுக்கே வந்த எருமை மாடு பைக்கில் சென்றவர் தடுமாறி விழுந்து பலி

ADDED : செப் 04, 2025 09:20 PM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகே, நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற நபர், திடீரென எருமை மாடு குறுக்கே வந்ததால், நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த மெல்ரோசாபுரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன், 35. இவர், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று அதிகாலை, 1:30 மணியளவில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், ஒரகடம் நோக்கி, 'ஹீரோ ஸ்பிளென்டர்' பைக்கில் சென்றார்.
கொளத்துார் குப்பைக் கிடங்கு எதிரே சென்ற போது, சாலையின் குறுக்கே திடீரென எருமை மாடு வந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பைக், எருமை மாட்டின் மீது மோதியது.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெயராமனுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தோர் அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிங்கபெருமாள் கோவில் அருகிலுள்ள அரசு அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ஜெயராமனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்தில், எருமை மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து, பாலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.