/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோழி பலியிடும் வினோத திருவிழா சட்டமங்கலத்தில் விமரிசை
/
கோழி பலியிடும் வினோத திருவிழா சட்டமங்கலத்தில் விமரிசை
கோழி பலியிடும் வினோத திருவிழா சட்டமங்கலத்தில் விமரிசை
கோழி பலியிடும் வினோத திருவிழா சட்டமங்கலத்தில் விமரிசை
ADDED : செப் 02, 2025 12:59 AM
மறைமலை நகர், சட்டமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள எட்டி அம்மன் மற்றும் செங்கேணி அம்மன்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் கோழி பலியிடும் திருவிழா, விமரிசையாக நடந்தது.
சட்டமங்கலம் கிராமத்தில், பல தலைமுறையாக கிராமத்தினர் சார்பில், எட்டியம்மன் மற்றும் செங்கேணியம்மனுக்கு திருவிழா நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவில், கிராமத்திலுள்ள அமைத்து பொதுமக்களும் அம்மன்களுக்கு குடும்பம் குடும்பமாக, 25 தட்டு சீர்வரிசை வைத்து ஆடு, கோழி பலியிட்டு பாரம்பரியமாக வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த திருவிழா நேற்று முன்தினம், விமரிசையாக நடைபெற்றது.
இத்திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் பங்கேற்று, கோவில் குளக்கரையில் இருந்து கரகம் அலங்கரிக்கப்பட்டு, ஆடு பலியிட்டு, ஊரணி பொங்கல் வைத்து, ஊர் முழுதும் ஊர்வலம் சென்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கேயே பலியிடப்பட்ட கோழிகளை, குடும்பமாக சமைத்து சாப்பிட்டு விட்டுச் சென்றனர்.இந்த திருவிழாவில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.