/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகர் அருகே தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
/
மறைமலை நகர் அருகே தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
ADDED : மே 23, 2025 02:44 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த நின்னகரை பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர், சரக்கு வாகனங்களை வாடகைக்கு இயக்கி வருகிறார். இவரிடம் முரளி என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை முரளி,'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தை, மறைமலை நகரில் இருந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கி, ஜி.எஸ்.டி., சாலையில் ஓட்டிச் சென்றார்.
மறைமலை நகர் அடுத்த டென்சி பகுதியில் சென்ற போது, வாகனத்தின் முன் பக்கம் புகை வந்து, திடீரென தீப்பற்றி எரியத் துவங்கி உள்ளது.
உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய முரளி, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
மறைமலை நகர் போலீசார் விசாரணையில், வாகனத்தில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியது தெரிந்தது.