/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உதயம்பாக்கம் பாலாற்றில் தடுப்பணை அவசியம்
/
உதயம்பாக்கம் பாலாற்றில் தடுப்பணை அவசியம்
ADDED : மார் 21, 2025 11:41 PM
செங்கல்பட்டு, உதயம்பாக்கம் - படாளம் பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணியை துவக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், பயிற்சி சப் - கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், உதயம்பாக்கம் - படாளம் இடையே பாலாற்றில் தடுப்பணை கட்ட நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். விவசாயிகள் நலன் கருதி, தடுப்பணை கட்டும் பணியை துவக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெரும்பூர் கிராமத்தில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்பு உள்ளதை அகற்ற வேண்டும்.
பாசன கால்வாய்களை துார் வாரி சீரமைக்கவும், குண்டூர் ஏரி பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இலவச வீட்டுமனை பட்டா கோரி விண்ணப்பித்தவர்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை, நந்தனத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை, திருக்கழுக்குன்றத்தில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.
சப் - கலெக்டர் மாலதி ஹெலன் பேசியதாவது:
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்திற்கு வரும் அதிகாரிகள், உங்கள் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை எடுத்து வர வேண்டும். திட்டங்கள் குறித்து, அரசுக்கு அனுப்பிய தகவல்களையும் கொண்டுவர வேண்டும். அடுத்த கூட்டத்திற்கு வரும் போது, தவறாமல் கொண்டுவர வேண்டும்
இவ்வாறு, அவர் பேசினார்.