/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு
/
வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு
ADDED : ஜன 27, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டாங்கொளத்துார், காட்டாங்கொளத்தூர் அடுத்த நின்னகரை பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் வீட்டில், நேற்று மதியம் சுற்றுச்சுவர் அருகே இருந்த கற்களுக்கு இடையே, 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு புகுந்தது. இதை பார்த்த குடும்பத்தினர், அவறியடித்து வெளியே ஓடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள், நல்ல பாம்பை உயிருடன் பிடித்து, மறைமலைநகர் வனப்பகுதியில் விட்டனர்.

