/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எரியாத உயர் கோபுர மின்விளக்கு குண்ணவாக்கத்தில் கும்மிருட்டு
/
எரியாத உயர் கோபுர மின்விளக்கு குண்ணவாக்கத்தில் கும்மிருட்டு
எரியாத உயர் கோபுர மின்விளக்கு குண்ணவாக்கத்தில் கும்மிருட்டு
எரியாத உயர் கோபுர மின்விளக்கு குண்ணவாக்கத்தில் கும்மிருட்டு
ADDED : ஏப் 14, 2025 12:38 AM

மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு அம்மணம்பாக்கம் -- அஞ்சூர் சாலையில் இருளர் குடியிருப்பு பகுதி சாலை சந்திப்பில், தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக, உயர்கோபுர மின் விளக்குகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டன.
இது, இந்த பகுதி மக்கள் மற்றும் இந்த சாலையை பயன்படுத்தி வந்த திருவடிசூலம், பட்டரவாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் அச்சமின்றி சென்று வர உதவியாக இருந்தது.
தற்போது கடந்த சில மாதங்களாக இந்த விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் இந்த வழியாக செல்லும் போது அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, இந்த உயர்கோபுர மின் விளக்குகளை பழுது நீக்க, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.