/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திறக்காமல் வீணாகும் சமையல் கூடம்
/
திறக்காமல் வீணாகும் சமையல் கூடம்
ADDED : டிச 30, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூவத்துார் ஊராட்சி, பழைய காலனியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு அங்கன்வாடி மையமும், சமையல்கூடமும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன், இதே பள்ளி வளாகத்தில் புதிதாக, சமையல்கூடம் கட்டப்பட்டது. ஆனால், ஓராண்டாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
சமையல் கூடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சங்கர சுதன்: கூவத்துார்:

