/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொய் வழக்கு பதிந்து இளைஞர் கைது இன்ஸ்பெக்டரை கண்டித்து போராட்டம்
/
பொய் வழக்கு பதிந்து இளைஞர் கைது இன்ஸ்பெக்டரை கண்டித்து போராட்டம்
பொய் வழக்கு பதிந்து இளைஞர் கைது இன்ஸ்பெக்டரை கண்டித்து போராட்டம்
பொய் வழக்கு பதிந்து இளைஞர் கைது இன்ஸ்பெக்டரை கண்டித்து போராட்டம்
ADDED : அக் 28, 2024 01:13 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ், 29. பட்டதாரியான இவர், கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 18ம் தேதி இரவு, மறைமலை நகர் காவல் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என கூறி, துரைராஜை காவல் நிலையம் அழைத்து சென்று, கோவிந்தாபுரம் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் நபரை மிரட்டி பணம் கேட்டதாக கூறி வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தமிழக யாதவ மகா சபையின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் தலைமையில், நேற்று காலை சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், துரைராஜ் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி, மறைமலைநகர் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழக யாதவ மகா சபை நிர்வாகிகள் கூறியதாவது:
கார் டிரைவரான துரைராஜ், சில மாதங்களுக்கு முன், கீழக்கரணை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பிரபல கட்சி நிர்வாகி ஒருவரிடம், 40 நாட்களுக்கு மேலாக வேலை பார்த்து வந்தார்.
இதற்கு சம்பளம் வழங்காமல், கட்சி நிர்வாகி ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. சம்பளம் கேட்ட துரைராஜ் மீது, அந்த அரசியல்வாதியின் உறவினர் வாயிலாக பொய் புகார் அளித்து, துரைராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கு இன்ஸ்பெக்டர் உடந்தையாக செயல்பட்டு வருகிறார். எனவே, இன்ஸ்பெக்டர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் உள்ள அனைத்து யாதவ மக்களையும் ஒன்று திரட்டி, பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

