/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்கசிவால் குடிசை வீடு தீப்பற்றி எரிந்து நாசம்
/
மின்கசிவால் குடிசை வீடு தீப்பற்றி எரிந்து நாசம்
ADDED : ஜூன் 11, 2025 02:23 AM

செய்யூர்:தேவனுாரில், மின்கசிவால் மின்கம்பியில் இருந்து தீப்பொறி விழுந்து, குடிசை வீடு எரிந்து நாசமானது.
செய்யூர் அடுத்த தேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், 45. இவர், குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இவரது குடிசை வீட்டிற்கு மேல், குடியிருப்பு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள, மின்கம்பிகள் செல்கின்றன. நேற்று காலை 11:00 மணியளவில், இந்த மின்கம்பிகளில் இருந்து தீப்பொறி விழுந்து, குடிசை வீடு தீப்பற்றியது. வீடு தீப்பற்றியதை அறிந்த அன்பழகன், குடும்பத்துடன் உடனே வெளியேறி, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், குடிசை வீடு முழுதும் எரிந்து, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.
இந்த தீ விபத்து குறித்து, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.