/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயன்பாடற்ற இடத்தில் நிழற்குடை மக்கள் வரிப்பணம் வீணான அவலம்
/
பயன்பாடற்ற இடத்தில் நிழற்குடை மக்கள் வரிப்பணம் வீணான அவலம்
பயன்பாடற்ற இடத்தில் நிழற்குடை மக்கள் வரிப்பணம் வீணான அவலம்
பயன்பாடற்ற இடத்தில் நிழற்குடை மக்கள் வரிப்பணம் வீணான அவலம்
ADDED : அக் 15, 2025 12:40 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, பயன்பாடற்ற இடத்தில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டதால், மக்கள் வரிப்பணம் வீணாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
உத்திரமேரூர் - மதுராந்தகம் மாநில நெடுஞ்சாலையில், மொறப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது.
இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் இடதுபுறத்தில், 2020 - -21-ம் ஆண்டு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், பேருந்து பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
நுழைவாயிலின் வலதுபுறத்தில், பழைய நிழற்குடை உள்ளது.
அதாவது, ஒரே மார்க்கத்தில், ஒரே பகுதியில் அருகருகே இரண்டு நிழற்குடைகள் உள்ளன.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்டவை பழைய பயணியர் நிழற்குடை பகுதியில் நிறுத்தப்படுவதால், அங்கேயே பயணியர் காத்திருந்து பயணிக்கின்றனர்.
இதன் காரணமாக, புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, பயன்பாடு இல்லாமல் உள்ளது. அத்துடன், 'குடி'மகன்களின் கூடாரமாகவும் மாறியுள்ளது. இந்த பேருந்து நிழற்குடையில் குப்பை குவிந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும், இரும்பாலான இருக்கைகளை, மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.
முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்ட இந்த நிழற்குடை, பயணியருக்கு பயன்படாமல் உள்ளது. யாருடைய லாபத்திற்காக இந்த நிழற்குடை கட்டப்பட்டது எனத் தெரியவில்லை. இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.