/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஈச்சர் லாரி மோதி விபத்து ஆட்டோவில் சென்ற பெண் பலி
/
ஈச்சர் லாரி மோதி விபத்து ஆட்டோவில் சென்ற பெண் பலி
ADDED : செப் 20, 2024 08:05 PM
மதுராந்தகம்:சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், 40. ஆட்டோ ஓட்டுனர். இவர், மனைவி கிருஷ்ணவேணி, 34, மகள்கள் நவ்யாஸ்ரீ, 16, சோபியா, 14, ஆகியோருடன், நேற்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆட்டோவில் சென்றனர்.
அப்போது, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாமண்டூர் தனியார் உணவகம் அருகே ஆட்டோ சென்றபோது, திருச்சிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, எதிர்பாராத விதமாக ஆட்டோவின் பின்னால் மோதியது.
இதில், ஆட்டோவில் பயணம் செய்த நால்வரும் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, கிருஷ்ணவேணி, 34, உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த படாளம் போலீசார், விபத்தை ஏற்படுத்தி, தலைமறைவான ஈச்சர் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.