/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வலிப்பு நோயால் வாலிபர் உயிரிழப்பு?
/
வலிப்பு நோயால் வாலிபர் உயிரிழப்பு?
ADDED : டிச 04, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வலிப்பு நோயால் உயிரிழந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புளியந்தோப்பு பகுதியில் நேற்று இரவு, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி துாய்மைப் பணியாளர்கள் அளித்த தகவலின் படி, அங்கு வந்த ஓட்டேரி போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு விசாரித்தனர். இதில், அவர் புளியந்தோப்பு, வ.உ.சி., நகரை சேர்ந்த பெருமாள், 28, என்பதும்,
மது போதையில் இருந்தவர் திடீரனெ வலிப்பு ஏற்பட்டு, ஆட்டோவில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

