/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையின் குறுக்கே சென்ற மாடு பைக்கிலிருந்து விழுந்து இளம்பெண் காயம்

ADDED : அக் 06, 2025 01:28 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் மாடு குறுக்கே வந்ததால், பெற்றோருடன் பைக்கில் சென்ற இளம்பெண், தடுமாறி விழுந்து காயமடைந்தார்.
செங்கல்பட்டு அடுத்த மேலேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 48. இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் மனைவி மற்றும் மகள் தேவதர்ஷினி, 21, ஆகியோருடன், 'டூயூக்' பைக்கில் உத்திரமேரூரில் இருந்து மேலேரிப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மதுராந்தகம் -- செங்கல்பட்டு சாலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே வந்த போது, சாலையில் சுற்றித் திரிந்த மாடு குறுக்கே வந்துள்ளது. இதில் மூவரும் தடுமாறி, சாலையில் விழுந்துள்ளனர். இந்த விபத்தில், தேவதர்ஷினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தம்பதி காயமின்றி தப்பினர். பின், தேவதர்ஷினியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.