/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா நாளை துவக்கம்
/
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா நாளை துவக்கம்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா நாளை துவக்கம்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா நாளை துவக்கம்
ADDED : ஜூலை 24, 2025 10:24 PM
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், 54வது ஆண்டு ஆடிப்பூர விழா நாளை துவங்கி, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா நடந்து வருகிறது. இந்தாண்டு, 54வது ஆடிப்பூர விழா, ஆதிபராசக்தி அம்மன், பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு அபிஷேகத்துடன் நாளை துவங்கி, மாலை 4:30 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜை நடக்கிறது.
அதன் பின், 27ம் தேதி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
சித்தர் பீடம் வரும் கஞ்சி கலயங்களை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் அன்பழகன் வரவேற்கிறார்.
காலை 8:45 மணிக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் துவக்குகிறார். காலை 11:00 மணிக்கு, சுயம்பு ஆதிபராசக்தி அன்னைக்கு பாலாபிஷேக விழாவை, லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து, வரும் 28ம் தேதி வரை பாலாபிஷேகம் நடக்கிறது.
இவ்விழாவிற்கு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார். சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் பாதுகாப்பிற்காக, மாவட்ட எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.