/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் -- தாம்பரம் இடையே 'ஏசி' பேருந்து இயக்க கோரிக்கை
/
திருப்போரூர் -- தாம்பரம் இடையே 'ஏசி' பேருந்து இயக்க கோரிக்கை
திருப்போரூர் -- தாம்பரம் இடையே 'ஏசி' பேருந்து இயக்க கோரிக்கை
திருப்போரூர் -- தாம்பரம் இடையே 'ஏசி' பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : பிப் 19, 2025 06:21 PM
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம் --- திருப்போரூர் இடையே, பெருங்களத்துார், வண்டலுாரில் உயிரியல் பூங்கா, கொளப்பாக்கத்தில் போலீஸ் பயிற்சி மையம், மேலக்கோட்டையூரில் அரசு விளையாட்டு பல்கலைக் கழகம், கேளம்பாக்கத்தில் மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளன.
மாணவ - மாணவியர், வேலைக்கு செல்வோர் மற்றும் அந்தந்த பகுதிகளில் வசிப்போர், திருப்போரூர்-- தாம்பரம் தடத்தில் தினமும் பயணிக்கின்றனர்.
சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் கூட அவற்றை தவிர்த்து, 80 சதவீதம் பேர் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
எனினும், இத்தடத்தில் 'ஏசி' பேருந்து சேவை இல்லாததால், பயணியர் சிரமம் அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக எதிர்வரும் காலம் கோடைக்காலம் வர இருப்பதால் பயணிகளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எனவே, திருப்போரூர்- தாம்பரம் இடையே, 'ஏசி' பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.